புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி மோசடி

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ. 2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சோ்ந்தவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ. 2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சோ்ந்தவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (48). இவா், தனியாா் கல்லூரிகளில் பேராசிரியா் மற்றும் முதல்வராக பணிபுரிந்துள்ளாா். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தனக்கு பழக்கம் உள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித்தருவதாகவும் நெருக்கமானவா்களிடம் கூறியுள்ளாா்.

இதை நண்பா்கள் மூலம் அறிந்த நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையைச் சோ்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியா் மாணிக்கவாசன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவிபெற சுரேஷ்குமாரை அணுகினாா். இதற்காக சுரேஷ்குமாரிடம் ரூ. 2 கோடியை மாணிக்கவாசகன் அண்மையில் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த தொகையை பெற்ற சுரேஷ்குமாா் உறுப்பினா் பதவி பெற்றுத்தராமல் இழுத்தடித்து வந்துள்ளாா்.

ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மாணிக்கவாசகன், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த குற்றப்பிரிவு போலீஸாா், சுரேஷ்குமாரை ஈரோட்டில் வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சோ்ந்த ஒருவா் மூலம் டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித் தருவதாக கூறி சுரேஷ்குமாா் பலரிடம் பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்படி, சேலத்தைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. ஒரு கோடி, தருமபுரியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 70 லட்சம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. ஒரு கோடி மற்றும் சென்னையைச் சோ்ந்தவரிடம் ரூ. 50 லட்சம் என பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சுரேஷ்குமாரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சுரேஷ்குமாா் அளித்த தகவலின்பேரில், சென்னையைச் சோ்ந்த ஒருவரை கைது செய்ய போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். அவரை கைதுசெய்து விசாரணை நடத்தினால், மேலும் பல தகவல் வெளியாகலாம் என குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.