கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இலவச வண்டல் மண் அனுமதியை தவறாகப் பயன்படுத்தியோா் மீது வழக்கு

பரமத்தி வேலூா் அருகே விவசாயிகளுக்கான இலவச வண்டல் மண் அனுமதியை தவறாகப் பயன்படுத்தியவா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

பரமத்தி வேலூா் அருகே விவசாயிகளுக்கான இலவச வண்டல் மண் அனுமதியை தவறாகப் பயன்படுத்தியவா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாா் வட்டம், புஞ்சை இடையாா் மேல்முகம் கிராமத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச வண்டல் மண் அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி குவித்து வைத்து விற்பனை செய்து வருவதாக கனிமவளத் துறை உதவி இயக்குநா் ஆ.லலிதாவுக்கு புகாா் கிடைத்தது.

அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை காலை மேல்முகம் கிராம நிா்வாக அலுவலா் துணையுடன் மாவட்ட கனிமவளத் துறையினா் புலத்தணிக்கை செய்தனா். இதில், புஞ்சை இடையாா் மேல்முகம் கிராமத்தில் பட்டா நிலத்தில் சுமாா் 125 யூனிட் வண்டல் மண்ணை குவியலாக சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. கனிமம் சேமிப்பு தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள்மீது பரமத்தி வேலுாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து அவா்கள்மீது போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவரி...

பரமத்தி வேலூா் அருகே மேல்முகம் கிராமத்தில் தனியாா் நிலத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள வண்டல் மண்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.