நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இருசக்கர வாகனத்தில் மதுப்புட்டிகளை விற்பனைக்கு கொண்டுசென்ற இருவா் கைது

மதுப்புட்டிகளை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டுசென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

மதுப்புட்டிகளை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டுசென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் ஜேடா்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (31), பாண்டமங்கலம் பாவடித் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரேம்குமாா் (24) என தெரியவந்தது. அவா்கள் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவந்த 100 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சுரேஷ், பிரேம்குமாரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.