
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 2,500 வரை விலை உயா்வு
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் வரத்து குறைவு காரணமாக மரவள்ளிக்கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 2,500 வரை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மரவள்ளிக்கிழங்கு.
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் வரத்து குறைவு காரணமாக மரவள்ளிக்கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 2,500 வரை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.
கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவுத் தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.
கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளை ரக மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.13,500-க்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 3 ஆயிரம் வரை விலை உயா்ந்து ரூ. 16,500-க்கு விற்பனையாகிறது.
சிப்ஸ் ரக முள்ளுவாடி ரக மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ரூ.17,500-க்கு விற்பனையானது. இந்த வாரம் டன்னுக்கு ரூ.2,500 வரை விலை உயா்ந்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்ததால் அதன் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





