ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஸ்மார்ட்போன்களின் விலை உயர்கிறது! ரூ. 5000 வரை உயர்த்தும் போக்கோ, ஓப்போ!

போக்கோ, ஓப்போ நிறுவனங்கள், ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது குறித்து...

News image

ஸ்மார்ட்போன்கள் - கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 5:54 pm IST

சீனாவைச் சேர்ந்த போக்கோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இந்த விலை ஏற்றத்தின் காரணமாக இந்நிறுவனங்களின் முக்கிய மாடல்களான போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் விலை ரூ. 2,000, போக்கோ சி81எக்ஸ் மற்றும் சி81 விலை ரூ. 500 வரையும் உயரவுள்ளது.

மக்களால் அதிகம் வாங்கப்படும் ஓப்போ கே13 டர்போ விலை ரூ.5,000 வரை உயரவுள்ளது.

இந்த விலை ஏற்றமானது ஸ்மார்ட்போன்களின் நினைவக திறன் மற்றும் மாடல்களின் சிறப்பம்சங்கள் பொருத்து மாறுபடும் என போக்கோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகபட்சமாக 12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் கொண்ட ஓப்போ கே 13 டர்போ ப்ரோ விலை ரூ. 5,000 உயருகிறது.

போக்கோ ஸ்மார்ட்போன்களின் உயர்த்தப்பட்ட விலை

போக்கோ எக்ஸ் 8 ப்ரோ விலை ரூ. 2,000 உயருகிறது. இதன்மூலம் இதன் விலை ரூ.48,999 என அதிகரிக்கவுள்ளது.

8GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய போக்கோ எக்ஸ் 8 ப்ரோ விலை ரூ. 3,000 அதிகரித்து ரூ.39,999க்கு விற்கப்படவுள்ளது.

12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய போக்கோ எக்ஸ் 8 ப்ரோ விலை ரூ. 3,000 அதிகரித்து ரூ. 42,999க்கு விற்கப்படவுள்ளது.

3GB + 64GB நினைவகம் கொண்ட போக்கோ சி 81 விலை ரூ. 500 உயர்ந்து ரூ. 12,499க்கு விற்கப்படவுள்ளது.

4GB + 64GB நினைவகம் கொண்ட போக்கோ சி 81 விலை ரூ. 500 உயர்ந்து ரூ. 13,499க்கு விற்கப்படவுள்ளது.

ஓப்போ ஸ்மார்ட்போன்களின் உயர்த்தப்பட்ட விலை

8GB + 256GB நினைவகம் கொண்ட ஓப்போ கே 13 டர்போ ப்ரோ விலை ரூ. 4000 உயர்ந்து ரூ. 41,999க்கு விற்கப்படவுள்ளது.

12GB + 256GB நினைவகம் கொண்ட ஓப்போ கே 13 டர்போ ப்ரோ விலை ரூ. 5000 உயர்ந்து ரூ. 44,999 க்கு விற்கப்படவுள்ளது.

Summary

POCO and OPPO have increased the prices of several smartphones in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.