
7000mAh பேட்டரி... நாளை அறிமுகமாகிறது ஓப்போ கே 14 லைட் ஸ்மார்ட்போன்!
ஓப்போ நிறுவனத்தின் கே 14 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போன் நாளை (செப். 16) வெளியாகவுள்ளது குறித்து...

ஓப்போ கே 14 லைட் - படம் / நன்றி - ஓப்போ
ஓப்போ நிறுவனத்தின் கே 14 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போன் நாளை (செப். 16) வெளியாகவுள்ளது. பேட்டரி திறன், வடிவமைபு மற்றும் வண்ணங்கள் இதன் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ஓப்போ நிறுவனத்தின் கே வரிசை ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளியாவதால், நடுத்தர பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் தற்போது ஓப்போ கே 14 லைட் என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. நாளை நண்பகல் 12 மணியளவில் விற்பனை தொடங்கவுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஓப்போ கே 14 லைட் ஸ்மார்ட்போன் 6.75 அங்குல திரை கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
யுனிசாக் T7250 4ஜி புராசஸர் உடையது.
கலர் ஒஎஸ் 16 இயங்குதளம் (Color OS 16 ) உடையது.
7000mah பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக 13MP பின்புற கேமரா கொண்டுள்ளது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மைக்காக IP64 ரேட்டிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்யறிவு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Summary
7000mAh battery... Oppo K14 Lite smartphone launches tomorrow sep. 16
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






