
சோனி கேமரா, 7200 mAh பேட்டரி... ஐக்யூ இசட் 11எக்ஸ்ஏ இன்று அறிமுகம்!
ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் இன்று பகல் 12 மணி முதல் விற்பனை தொடக்கம்...

ஐக்யூ இசட் 11எக்ஸ்ஏ - படம் / நன்றி - ஐக்யூ
ஐக்யூ இசட் 11 எக்ஸ்ஏ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமானது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று அறிமுகமான நிலையில், சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் இன்று (செப். 14) நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்கியுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐக்யூ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஐக்யூ இசட் 11எக்ஸ்ஏ இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இதன் விலை ரூ. 28,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ. 1500 கூப்பனும், ஐசிஐசிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கிக் கடன் அட்டைகளுக்கு கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்
ஐக்யூ இசட் 11 எக்ஸ்ஏ ஸ்மார்ட்போன்
6.76 அங்குல எச்.டி. திரை கொண்டது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 5ஜி புராசஸர் உடையது.
4 ஆண்டுகளுக்கான ஆன்டிராய்டு அப்டேட் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக 50 மெகா பிக்சல் சோனி கேமரா கொண்டது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
7200mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 44W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மைக்காக ஐபி68 மற்ரும் ஐபி 69 ரேட்டிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







