
ஆடியோ கேட்க இனி ஹெட்செட் தேவையில்லை! அறிமுகமானது ஃபையர் போல்ட் ஸ்மார்ட் கண்ணாடி!
ஃபையர் போல்ட் நிறுவனத்தில் ஃபையர் லென்ஸ் டூன் என்ற ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகமாகியுள்ளது குறித்து...

ஃபையர் போல்ட் ஸ்மார்ட் கண்ணாடி - படம் / நன்றி - ஃபையர் போல்ட்
ஃபையர் போல்ட் நிறுவனத்தில் ஃபையர் லென்ஸ் டூன் என்ற ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகமாகியுள்ளது.
வெறும் கண்ணாடியாக மட்டும் அல்லாமல், பாடல் கேட்க, அழைப்புகளுக்கு பதிலளித்துப் பேசும் வகையிலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
ஃபையர் லென்ஸ் டூன் ஸ்மார்ட் கண்ணாடி மூலம் அழைப்புகளுக்கு ஸ்மார்ட்போனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட் கண்ணாடியில் இருந்தே அழைப்புகளை குரல் மூலம் மேற்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் அழைப்பு அல்லது பாடல்களை கட்டுப்படுத்த கண்ணாடியின் பக்கவாட்டில் டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. 2 விநாடிகள் அழுத்திப்பிடித்தால் போதுமானது.
காதுமடல்களுக்கு அருகே ஆடியோ வரும் வகையில் கண்ணாடியில் ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் உடன் கண்ணாடியை இணைத்துக்கொள்ளலாம்.
கண்ணாடியின் இருபுற முனைகளையும் 5 விநாடிகள் அழுத்தினால் ஸ்மார்ட்போன் உடன் கண்ணாடி புளூடூத் வழியாக இணையும். (ஸ்மார்ட்போனில் புளூடூத் இயக்க நிலையில் இருக்க வேண்டும்)
நாள்காட்டி அலாரம், கூகுள் வழித்தடம் போன்றவற்றுக்கு உகந்தது.
15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம். பாடல் கேட்டால் 6 மணி நேரம் பயன்படுத்தலாம்.
Summary
Fire Boltt Fire Lens Dune Smart Glasses Bluetooth Audio Hands-Free Calls Voice Assistant
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







