கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இனி வாட்ஸ்ஆப்பிலேயே மின்சாரம், கேஸ் பில்களை கட்டலாம்! புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் இனி மின்சாரம், கேஸ், ஃபாஸ்டேக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தும் புதிய அம்சம் குறித்து...

WhatsApp New feature introduced

வாட்ஸ்ஆப் - எக்ஸ்

Published On :

வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் இனி மின்சாரம், கேஸ், ஃபாஸ்டேக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்களை (பில்) செலுத்தும் வகையிலான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் பில் மேமெண்ட் சிஸ்டம் உதவியுடன் 30 பிரிவுகளின் கீழ் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களின் பில்களை வாட்ஸ்ஆப் செயலியில் இருந்தவாறே யுபிஐ, டெபிட், கிரெடிட் அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

மெட்டா நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குநர் அருண் சீனிவாஸ் இது தொடர்பாக பேசியதாவது:

''லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு மிகவும் எளிமையான தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது. தற்போது சில அத்தியாவசிய சேவைகளுக்காக பிற செயலிகளுக்குச் செல்லாமல், வாட்ஸ்ஆப்பில் இருந்தவாறே அவற்றை முடிக்க முடியும்.

செயலியில் இருந்து வெளியேறாமலேயே அரசு சேவைகளுக்கான கட்டணம், மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கான கட்டணத்தை வாட்ஸ் ஆப்பில் இருந்தே செலுத்த முடியும்'' எனக் குறிப்பிட்டார்.

எந்தெந்த சேவைகளுக்கு கட்டணம் செலுத்தலாம்

வாட்ஸ்ஆப் செயலியில் இருந்தவாறே இனி மின்சார கட்டணம், கேஸ் இணைப்பு கட்டணம், மெட்ரோ குடிநீர், ஃபாஸ்டேக், காப்பீடு தவணை, கடன் செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளுக்கு யுபிடி அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

இதற்காக வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள ரூபாய் ஐகானை கிளிக் செய்தால் போதுமானது.

இப்போது கட்டணம் செலுத்த வேண்டிய பிரிவுகள் தோன்றும்.

எந்தவகையான பில்லை கட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு வங்கிக் கணக்கு தகவல்களை இணைத்துவிட்டால், அந்தந்த சேவைகளுக்கு கட்டணம் செலுத்தலாம்.

இதற்காக தனியாக கடவுச் சொல்லையும் நிர்ணயித்துக்கொள்ளலாம். இதனால், கட்டணம் செலுத்தும் முறை பாதுகாப்பானதாக இருக்கும்.

இதேபோன்று ஒரு வாட்ஸ்ஆப் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும் இணைத்து கட்டணங்களை செலுத்தலாம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

Summary

You can now pay electricity and gas bills directly on WhatsApp New feature introduced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER