
ஐபோன் 18 உடன் வெளியாகும் மடிக்கக்கூடிய ஐபோன்! விலை நிலவரம் வெளியானது!
ஐபோன் 18 ப்ரோ உடன் வெளியாகும் மடிக்கக் கூடிய ஐபோன் விலை நிலவரம் குறித்து...

மடிக்கக்கூடிய ஐபோன் - படம் / நன்றி - ஆப்பிள்
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone) அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.
ஐபோன் 18 ப்ரோ உடன் மடிக்கக் கூடிய ஐபோனை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதுமே அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் உள்ளனர். தற்போது ஐபோன் 18 வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இத்துடன் மடிக்கக் கூடிய ஐபோனையும் வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் முதல்முறையாக மடிக்கக் கூடிய ஐபோன் வெளியாகவுள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், செப். 9 ஆம் தேதி வெளியாகும் ஐபோன் 18 ப்ரோ உடன் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இதன் விலை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 256GB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 3699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2,50,800.
இதேபோன்று 512GB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோன் விலை ரூ. 2,84,700. 1TB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோன் விலை ரூ. 3,18,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Leaked Foldable iPhone Prices Start at 2,50,800 in Australia
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







