
அதீத பயன்பாட்டிலும் வெப்பமாகாத ஸ்மார்ட்போன்! இன்ஃபினிக்ஸ் 70 ஹாட் அறிமுகம்!
கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் புராசஸர், வெப்பத்தை தவிர்க்கும் தன்மை சிறப்பம்சங்களாக உள்ளன.

இன்ஃபினிக்ஸ் 70 ஹாட் - படம் / நன்றி - இன்ஃபினிக்ஸ்
இன்ஃபினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் புராசஸர், வெப்பத்தை தவிர்க்கும் தன்மை உள்ளிட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நடுத்தர வகையைச் சேர்ந்த பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.
சிறப்புகள்
இன்ஃபினிக்ஸ் 70 ஹாட் ப்ரோ ஸ்மார்ட்போன் 6.76 அங்குல ஹெச்.டி. + எல்.இ.டி. திரை
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144 ஹெர்ட்ஸ் திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருப்பதற்காக 910 நிட்ஸ் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் கொண்டது.
ஆன்டிராய்டு 16 அடிப்படையிலான எக்ஸ்.ஓ.எஸ். 16 இயங்குதளம் உடையது. 3 முக்கிய ஆன்டிராய்டு அப்டேட்டுகள் உள்ளன.
கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் 50 மெகாபிக்சல் சோனி லென்ஸ் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
6000 எம்.ஏ.எச். பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45 வாட்ஸ் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
10 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் இருப்பதால் மற்ற சாதனங்களையும் இதிலிருந்து சார்ஜ் செய்ய முடியும்.
பைபாஸ் சார்ஜிங் அம்சம் உள்ளதால், கேமிங் போன்ற அதிக செயல்திறன் தேவைப்படும்போது, சார்ஜிங்கில் மின்சாரம் நேரடியாக போனுக்கு வழங்கப்படுவதால் ஏற்படும் வெப்பம் தவிர்க்கப்படும்.
6 ஜிபி / 8 ஜிபி உள்நினைவகம், 128 ஜிபி நினைவகம் உள்ளதால் பல செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
இதன் விலை ரூ. 27,999. வங்கிச் சலுகைகளுடன் ரூ. 22,999-க்கு விற்பனையாகிறது.
Summary
Infinix Hot 70 Pro smart phone launched in India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






