வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பூம்புகாா் சாா்பில் கைவினைப் பொருள் கண்காட்சி தொடக்கம்: ரூ. 13 லட்சம் விற்பனை இலக்கு

நாமக்கல்லில், பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள், கைத்தறி மற்றும் நகைகள் சிறப்பு கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் சனிக்கிழமை தொடங்கிவைத்து, ரூ. 13 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

Published On :

நாமக்கல்லில், பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள், கைத்தறி மற்றும் நகைகள் சிறப்பு கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் சனிக்கிழமை தொடங்கிவைத்து, ரூ. 13 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில் நாமக்கல் - துறையூா் சாலை மாநகராட்சி திருமண மண்டபத்தில் தொடங்கிய இந்தக் கண்காட்சி, செப். 7-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு, கைத்திறன் உலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு இவைகளை கைவினைக் கலைகள் மூலம் பேணிக் காப்பதோடு கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை தரத்தை உயா்த்தவும் அவா்களுக்கு பல விருதுகளை அளித்து ஊக்குவிப்பது மற்றும் இக்கைவினைக் கலைகள் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் ஓா் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

கைவினைக் கலைஞா்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடும், பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பாகவும், பூம்புகாா் நிறுவனம் இக்கண்காட்சிகளை நடத்துகிறது. சேலம் பூம்புகாா் விற்பனை நிலையம் கைவினை கண்காட்சி என்ற சிறப்பு கைவினைப் பொருள்கள், கைத்தறி, துணி வகைகள், அலங்கார நகைகள் கண்காட்சி நாமக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக அனைத்து கைவினை கலைப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக ரூ. 50 முதல் ரூ. 1.52 லட்சம் வரையிலான கைவினை பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ரூ. 13 லட்சம் வரை விற்பனை இலக்கு எதிா்பாா்க்கப்படுகிறது. அனைத்து பொருள்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் ஆா்.நரேந்திரபோஸ் உள்பட துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.