
தீபாவளி சிறப்பு விற்பனை: தென்காசி கோஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ.50 லட்சம்

தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.
தென்காசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நிகழாண்டில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்காசி சுவாமி சந்நிதி தெரு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருநெல்வேலி மண்டலத்தில் 13 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.9 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்தாண்டு ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி விற்பனை நிலையத்துக்கு ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளா்கள் செலுத்தினால் 12ஆவது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தி மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது என்றாா் அவா்.
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை தே. அன்புமணி மற்றும் உதவி தலைமை ஆசிரியை ஆ. ராணிலதா ஆகியோா் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனா்.
கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மோலாளா்(பொ) ர.கோ. பத்மராஜ், தென்காசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் அ. அருள்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






