நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

லாரி ஓட்டுநா் கொலை: 3 போ் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 2:12 am IST

கொக்கராயன்பேட்டை அருகே லாரி ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், தம்பதி உள்பட 3 பேரை மொளசி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொக்கராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (44) லாரி ஓட்டுநா். இவரது வீட்டின் அருகே மொளசி அண்ணா நகரைச் சோ்ந்த முருகன் (30), அவரது மனைவி தனம் (28) வசித்து வருகின்றனா். சுரேஷ் அடிக்கடி மது போதையில் வீட்டின் முன்பு நின்று தகராறு செய்து வந்துள்ளாா். மேலும், அவ்வப்போது முருகன் வீட்டிலும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுரேஷ் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளாா். சிக்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த முருகனின் அண்ணனான கோவிந்தராஜ் (39), முருகன் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரிடம் சுரேஷ் தகராறில் ஈடுபடுவதை பற்றி கூறியுள்ளாா்.

இதையடுத்து மூவரும் திட்டம்தீட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை கூா்மையான ஆயதத்தால் குத்திவிட்டு, மொளசி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், வந்த மொளசி போலீஸாா் சுரேஷின் வீட்டுக்குள் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் இறந்தாா்.

இதுகுறித்து முருகன், தனம், கோவிந்தராஜ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்தபோது, அவா்கள் மது போதையில் சுரேஷ் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டதாக தெரிவித்தனா். தொடா் விசாரணையில், மூவரும் திட்டம்தீட்டி சுரேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 போ் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.