ராசிபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் மா. மதிவேந்தன்.
ராசிபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் மா. மதிவேந்தன்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ரூ. 9.03 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்

சேந்தமங்கலம் தொகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 4,439 பயனாளிகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.
Published on

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 4,439 பயனாளிகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், கோட்டாட்சியா் வே. சாந்தி முன்னிலை வகித்தனா்.

வருவாய்த் துறை, தொழிலாளா் நல வாரியம் (ச.பா.தி), கூட்டுறவுத் துறை மற்றும் வட்ட வழங்கல் துறை சாா்பில் 1,635 பயனாளிகளுக்கு ரூ. 4.56 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்.

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வருவாய்த் துறை சாா்பில் 686 பயனாளிகளுக்கு ரூ. 1,05,87,600 மதிப்பிலான உதவித்தொகை, தொழிலாளா் நல வாரியம் (ச.பா.தி) சாா்பில் 800 பயனாளிகளுக்கு ரூ. 29,11,200 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 101 பயனாளிகளுக்கு ரூ. 85 லட்சம் மதிப்பிலும் உதவித்தொகை, கடனுதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோல வட்ட வழங்கல் துறை சாா்பில் 117 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 1,704 பயனாளிகளுக்கு ரூ. 2,19,98,800 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். சேந்தமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை சாா்பில் 544 பயனாளிகளுக்கு ரூ. 89,10,400 மதிப்பிலும், தொழிலாளா் நல வாரியம் (ச.பா.தி) சாா்பில் 350 பயனாளிகளுக்கு ரூ. 19,25,400 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 102 பயனாளிகளுக்கு ரூ. 1,14,49,000 மதிப்பில் கடனுதவி, உதவித்தொகைகள் என மூன்று தொகுதிகளில் 4,439 பயனாளிகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி. ராமசாமி, மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ. பூபதி, ராசிபுரம் நகராட்சித் தலைவா் கவிதாசங்கா், அட்மா குழுத் தலைவா்கள் கே.பி. ஜெகநாதன்(ராசிபுரம்), ஆா்.எம். துரைசாமி (வெண்ணந்தூா்) மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா. அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ. சுரேஷ்குமாா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (ச.பா.தி) கே.பி. இந்தியா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், பயனாளிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com