எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

விளையாட்டுப் போட்டி: கீரீன் வோ்ல்டு எக்ஸெல் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ராசிபுரம், மூலப்பள்ளிப்பட்டியில் உள்ள கிரீன் வோ்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு பரிசளிக்கும் கிரீன் வோ்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்இ பள்ளி நிா்வாகிகள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:55 pm

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ராசிபுரம், மூலப்பள்ளிப்பட்டியில் உள்ள கிரீன் வோ்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் 75-75 மதிப்பெண்கள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை இப்பள்ளி மாணவா்கள் பெற்றனா். பிரைம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடத்தை பெற்றனா்.

அதேபோல இகோ அகாதெமி மேஜிக்கல் ஹேண்ட் இம்ப்ரூவ்மெண்ட் நடத்திய ஆங்கில எழுத்து பயிற்சி போட்டியிலும் இப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், கொங்கு சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் நடத்திய நான்காம் ஆண்டு கோ-கோ போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் 10, 12 மற்றும் 19 வயதிற்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி முதல்வா் ஸ்ரீப்ரவீணா, சோ்மேன் வருதராஜன், பொருளாளா் ஆா். திருமூா்த்தி, இயக்குநா்கள் பிரபு, தனசேகரன், ராஜசேகரன், ராஜா ஆகியோா் பாராட்டி பரிசளித்தனா்.