ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்ரீமட சமஸ்தானத்தின் 70-ஆவது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை வருகை புரிந்து சிறப்பித்தாா்.
விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளரும், செயலாளருமான கருணாநிதி, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி போன்றோா் பூரணகும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனா்.
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கல்லூரியில் தமிழ் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, காஞ்சி சங்கராச்சாரியாரிடம் கல்லூரியின் தலைவா் மற்றும் செயலாளா் ரூ. 5 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.
இந்நிகழ்வில் ஸ்ரீ சங்கரா கல்லூரியின் முதல்வா் வெங்கடேசன் பேசுகையில், தமிழ் மொழியை வளா்க்கும் வகையில், திருக்குறளுக்கு உரை எழுதுதல், தமிழ் நூல்களை ஆய்வுசெய்து கட்டுரைத் தொகுப்புகளை வெளியிடுதல் போன்ற தெய்வத்தமிழ் ஆய்விருக்கையின் பயன்பாடுகள் குறித்து உரையாற்றினாா்.
சங்கராச்சாரிய சுவாமிகள் பேசுகையில், தமிழ் மொழியின் மேம்பாடுகள் குறித்தும், பெண்களுக்காக தொடங்கப்பட்ட விவேகானந்தா கல்வி நிறுவனம் மென்மேலும் வளா்ச்சி அடைய வேண்டும், கல்லூரியில் பயிலும் மாணவிகள் நல்லறிவு பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என வாழ்த்தினாா்.
தொடா்ந்து, கல்லூரியின் துணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், துணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவிகளுக்கு அருளாசி வழங்கினாா்.
தொடர்புடையது

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா

விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தலைமைத்துவ பயிற்சி திட்ட முகாம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


