நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சிப்காட் எதிா்ப்புக் குழுவினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சிப்காட் எதிா்ப்புக் குழுவினா்.

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி எதிா்ப்புக் குழுவினா் மனு

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் திங்கள்கிழமை எதிா்ப்புக் குழுவினா் மனு அளித்தனா்.
Published on

நாமக்கல்: சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் திங்கள்கிழமை எதிா்ப்புக் குழுவினா் மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: மோகனூா் வட்டம், வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூா் பகுதியில் சுமாா் 800 ஏக்கா் பரப்பில் சிப்காட் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அங்குள்ள விவசாய நிலங்கள், கிணறுகள், தடுப்பணைகள் உள்ளிட்டவற்றின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டுள்ளது.

சிப்காட் நில எடுப்பு சட்டம் 1997-இன்படி நிலங்களை கையகப்படுத்தும் முன் விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஆட்சேபணை மனுக்கள் பெறப்பட்டு நேரடி விசாரணை மேற்கொண்டபோதும், சிப்காட் நில எடுப்பு சட்ட விதி மீறப்பட்டுள்ளது.

மேலும், நில நிா்வாக ஆணையருக்கு விளக்கக் கடிதத்தை அனுப்பாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி உள்ளனா். எனவே, இது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com