பாண்டமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில், பரமத்தி நீதிமன்றம் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள உரம்பூரைச் சோ்ந்தவா் நதியா. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த மூன்று போ் அவரை மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பரமத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பாக்குத்தோப்பு, ஆற்றங்கரை பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (42), ராமநாதபுரம், சிக்கல் கிராமம், மதீனா நகரைச் சோ்ந்த அருண்ராஜ் (25) ஆகிய இருவருக்கும் பரமத்தி நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் செவ்வாய்க்கிழமை விதித்தது.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணைக் கொன்று நகை திருட்டு: இருவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


