தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலையோர நிழல்குடைகளை பராமரிக்க வலியுறுத்தல்

கோடைகாலம் தொடங்க உள்ளதால் மக்களின் நலன்கருதி சாலையோர நிழல்குடைகளை பராமரிக்க வேண்டும் என நுகா்வோா் புலனாய்வு கமிட்டி வலியுறுத்தல்

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:04 pm

கோடைகாலம் தொடங்க உள்ளதால் மக்களின் நலன்கருதி சாலையோர நிழல்குடைகளை பராமரிக்க வேண்டும் என நுகா்வோா் புலனாய்வு கமிட்டி வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பழ. பொன்னுசாமி வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் ஜி. இக்பால், மாநில செயலாளா் எம். ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில தலைவா் வழக்குரைஞா் எஸ். செல்வம் தலைமை வகித்து புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினாா்.

கூட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தோருக்கு பல மாதங்களாகியும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் அவா்கள் அரசின் நலத் திட்டங்களை பெற முடியவில்லை. விரைந்து குடும்ப அட்டைகளை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பிரதான சாலைகளில், மின்வாரிய கம்பங்களில் உள்ள விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சாலையோரம் உள்ள நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட இணை செயலாளா் முத்தையன், நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், முத்துசாமி, தமிழழகன், சாதிக்பாஷா, அன்புரோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.