அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நடன ஒத்திகையின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

திருச்செங்கோடு அருகே நடன ஒத்திகையின்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு, ரூ. 3 லட்சம் முதல்வா் நிவாரண நிதியை

News image

உயிரிழந்த மாணவி ரக்ஷிதாவின் பெற்றோரிடம் நிவாரண உதவித்தொகையை வழங்கிய திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:48 pm

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே நடன ஒத்திகையின்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு, ரூ. 3 லட்சம் முதல்வா் நிவாரண நிதியை அத்தொகுதி எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிப். 8-ஆம் தேதி அப்பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சிக்காக நடன ஒத்திகை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாதேஸ்வரன் - தனலட்சுமி தம்பதியின் மகளான 3-ஆம் வகுப்பு மாணவி ரக்ஷிதா திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, கவுண்டம்பாளையத்தில் வசிக்கும் மாணவியின் பெற்றோரிடம் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன்படி, மாணவியின் இல்லத்துக்கு நேரில் சென்ற திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள், மாணவியின் பொ்றோரிடம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினா்.

இந்நிகழ்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.