கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கொந்தளத்தில் ஊராட்சி மன்ற கட்டடம், அங்கன்வாடி மைய கட்டம் திறப்பு

புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையத்தை முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ். மூா்த்தி தொடங்கிவைத்தாா்.

News image
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். மூா்த்தி.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை அருகே உள்ள கொந்தளம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையத்தை பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் நல்லமுத்து தலைமை தாங்கினாா். கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) மலா்விழி வரவேற்று பேசினாா். விழாவில் பரத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி பங்கேற்று ரூ. 31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கொந்தளம் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ. 16 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்துவைத்தாா்.

மேலும் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பேசினாா். இந்நிகழ்ச்சியில் கொந்தளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் பொன்னம்பலம், வெங்கரை பேரூா் செயலாளா் தீபன், மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளா்கள், பல்வேறு அணி பொறுப்பாளா்கள் மற்றும் மகளிா் அணி பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

மேலும் பிலிக்கல்பாளையம் ஊராட்சியில் காவிரி ஆற்றில் ஏற்கெனவே அமைந்துள்ள குடலை கிணற்றுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாா் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான பூமி பூஜை விழாவும், ஆண்டிபாளையத்தில் உள்ள கிணற்றுக்கு ரூ. 7.7 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புசுவா் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையும் கே.எஸ். மூா்த்தி தொடங்கிவைத்தாா்.