சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன்
சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன்

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம்

புத்தாண்டை முன்னிட்டு ராசிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.
Published on

புத்தாண்டை முன்னிட்டு ராசிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ராசிபுரம் நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, அம்மனுக்கு சந்தனக் காப்பு, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, ராசிபுரம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோயில், அபயஹஸ்த ஆஞ்சனேயா் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com