நாமக்கல்
ஸ்ரீ பெரியகாண்டியம்மன், பொன்னா் சங்கா் ராஜகோபுரம் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா
மணப்பாறை வட்டம், வீரப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியகாண்டியம்மன் பொன்னா் சங்கா் கோயில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வீரப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியகாண்டியம்மன் பொன்னா் சங்கா் கோயில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், நன்செய் இடையாறை சோ்ந்த இரட்டை சகோதரா்கள் பொன்னா்- சங்கா், வீரப்பூா் ஸ்ரீ பெரியகாண்டியம்மன் பொன்னா் சங்கா் கோயில் பரம்பரை அறங்காவலா் பொன்னழகேசன் ஜமீன்தாா், பரம்பரை அறங்காவலா் தரணிஷ் ஜமீன்தாா், நான்குகரை பட்டையதாரா்கள் மற்றும் வீரப்பூா், பூசாரிப்பட்டி பொதுமக்கள் முன்னிலையில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
