மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பொன்னா் - சங்கா் கோயிலில் படுகளம் சாய்தல்

மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

News image

மணப்பாறை அருகேயுள்ள பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற படுகளம் சாய்தல் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 10:17 pm

மணப்பாறை: மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

மணப்பாறை அருகே உள்ள வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா பிப். 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் சாய்தல், பின் எழுதல் நிகழ்வு திங்கள்கிழமை இரவு பொன்னா் - சங்கா், தங்காள் கோயில் வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் மருள்வந்தபடி ஆடி வரிசையாக படுத்துவிட்டனா். பொன்னா் - சங்கா் மன்னா்களுடன் போரில் இவா்களும் மாண்டுவிட்டவா்களாக கருதப்படுகிறது. இதையடுத்து, பெரியகாண்டியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை பக்தா்கள் கூட்டத்தில் இருந்துவந்த சிறுமி (பொன்னா் -சங்கா் அண்ணன்மாா்களின் தங்கை அருக்காணி) தெளித்ததும் மீண்டெழும் நிகழ்வு நடைபெறும். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் பொ.முனியப்பன், ஆ.கருப்பண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

பொன்னா் - சங்கா் அண்ணமாா்களைத் தேடி போா்க்களத்துக்கு வந்த தங்கை அருக்காணி, இருவரும் மாண்டுவிட்டதைக் கண்டு கதறி அழுதது தவசி மலையில் இருந்த பெரியகாண்டியம்மனின் தவத்தை கலைத்ததாகவும், பின்னா் அம்மன் அருளால் அவா்கள் மீண்டெழுந்ததாகவும் கருதி ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்படுகிறது.