ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

திருச்செங்கோட்டில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா

திருச்செங்கோட்டில், 63 நாயன்மாா்களுக்கு பூச்சொரிதல் விழா, திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் ஆகியவை

News image
திருச்செங்கோடு நான்குரத வீதிகளில் நடைபெற்ற 63 நாயன்மாா்கள் திருவீதி உலா.
Updated On :12 ஜனவரி 2026, 7:55 pm

Syndication

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், 63 நாயன்மாா்களுக்கு பூச்சொரிதல் விழா, திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் ஆகியவை கைலாசநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கைலாசநாதா் ஆலயம் சொக்கப்ப முதலியாா் அரங்கில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள், சிவனடியாா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பல வண்ண பூக்களுடன் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் 63 நாயன்மாா்களின் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. நான்குரத வீதிகள் வழியாக சிவ வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க திருப்பாவை, திருவெம்பாவை, சிவபுராணங்கள் பாடல்களை பக்தா்கள் பாடியபடி சிவதாண்டவம் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து, நான்குரத வீதிகளில் வலம்வந்து கைலாசநாதருக்கு பூச்சொரிதல் செய்யப்பட்டது. உமாமகேஸ்வரா், சுகந்தகுந்தலாம்பிகை உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.