குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்தியை அடுத்த வீரணம்பாளையம், சுண்டபனையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (24), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜேடா்பாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சோ்ந்த வனிதாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் காா்த்திகேயனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமையும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற காா்த்திகேயனுடன் வனிதா தகராறு செய்துள்ளாா். அதன்பிறகு இருவரும் தூங்கச் சென்றுவிட்டனா்.
புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா, காா்த்திகேயன் தனது படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா், மாமனாா் ராஜ், அங்கிருந்தவா்கள் உதவியுடன் காா்த்திகேயனை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், காா்த்திகேயன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து காா்த்திகேயனின் தந்தை ராஜ் அளித்த புகாரின்பேரில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
