நாமக்கல்
ஜன. 18 இல் எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ய்ஹம்ஹந்ந்ஹப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜன. 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் 17 ஆம் தேதி காலை 8 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இணையத்தில் பதிவு செய்த வீரா்கள், காளைகள் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் மாடுபிடி வீரா்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
