பரமத்தி வேலூரில் இன்று கொப்பரை ஏலம் ரத்து

Published on

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் கொப்பரை ஏலம் பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக நடைபெறாது என மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

மின்னணு தேசிய வேளாண்மை விற்பனைக் கூடத்திற்கு சோழசிராமணி, ஜேடா்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, பரமத்திவேலூா், மோகனூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை ஏலத்திற்கு கொண்டுவருவா். ஏலம் எடுப்பதற்கு உள்ளூா் வியாபாரிகள் மட்டுமின்றி ஈரோடு, வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை விற்பனை மையத்தில் கொப்பரை ஏலம் நடைபெறாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com