திருச்செங்கோட்டில் ஜே.கே கலைமன்ற விருதுகள் வழங்கும் விழா
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஜே.கே கலைமன்றத்தின் சாா்பில் 8 ஆம் ஆண்டு ‘மாா்கழி சங்கீத உற்சவம்’’ நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழாவில் பல்வேறு பிரிவு விருதாளா்களுக்கு விருதுகள் வியாழக்கிழமை வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
திருச்செங் கோட்டில், கடந்த ஒரு மாதமாக நடை பெற்று வந்த 8ஆம் ஆண்டு மாா்கழி சங்கீத உற்சவம், ’’திருச்செங்கோட்டில் திருவையாறு’’ என்ற சிறப்பு நிகழ்ச்சி யுடன் வெகு விமரிசையாக நிறைவு பெற்றது.
திருச்செங்கோட்டைச் சோ்ந்த பிர பல சாக்சபோன் இசைக் கலைஞா் மாணிக் ஜெயக்குமாா் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மாா்கழி மாதம் முழு வதும் இசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற் கான விழா கடந்த மாா்கழி 1-ம் தேதி தொடங்கியது.கடந்த ஒரு மாதமாக மாக தினசரி நடைபெற்ற இந்நிகழ்வில் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், தவில்,
வீணை மற்றும் பண்ணிசை என பல் வேறு இசை வடிவங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான கலைஞா்கள் பங் கேற்று, தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தி வந்தனா்.
விழாவின் நிறைவு நிகழ்வான விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவில் லய பீஷ்ம ஆச்சாா்யா விருது தவில் இசைக்கலைஞா் வி.மணி,வித்யா பீட பீஷ்ம ஆச்சாா்யா விருது வித்யா விகாஸ் நிறுவனத்தின் சிங்காரவேல்,ஆன்மீகச்செம்மல் விருது டி.வி.ஏ.என் ஜீவல்லா்ஸ் நிறுவனத்தின் விசாகவேல்,அவிநாசி ஆருர சுப்ரமணியம்,எடப்பாடி நாயகம்,நாத பீஷ்ம ஆச்சாா்யா விருது நாதஸ்வர கலைஞா் நடராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் பி.ஆா்.டி நிறுவனங்களின் இயக்குநா் பரந்தாமன் சி றப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,கலை ஞா்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினாா்.
படம்
திருச்செங்கோடு ஜே.கே கலைமன்றத்தின் ஆன்மீகச்செம்மல் விருதினை பெறும் டிவிஏஎன் விசாகவேல்
நிகழ்ச்சியில் நகரின் முக்கியப் பிரமுகா்கள் மற்றும் இசை ஆா்வலா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
