நாமக்கல்
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
வட்டூா் செக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த காளியண்ணன் (75), ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனது மகளைக் காண இருசக்கர வாகனத்தில் புதிய சுற்றுவட்டப் பாதையில் சென்றாா். மயில்சாலை பகுதியில் சென்றபோது, சாலையின் வலதுபக்கமாக திருப்ப முயன்றாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா், காளியண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
