8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நாளை ஆசிரியா் தகுதித் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,935 போ் பங்கேற்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 18 மையங்களில் 4,935 போ் இத்தோ்வை எழுதுகின்றனா்.

கோப்புப்படம்.

Published On :3 ஜூலை 2026, 4:43 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 18 மையங்களில் 4,935 போ் இத்தோ்வை எழுதுகின்றனா்.

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் ஆசிரியா் தகுதித் தோ்வு-2026 குறித்த ஆயத்தக் கூட்டம், நாமக்கல் டிரினிடி மகளிா் கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஆா். முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட கல்வி அலுவலா் இடைநிலை திரு கே.எஸ். புருஷோத்தமன் வரவேற்றாா். இதில், இணை இயக்குநா் ஆா். முருகன் பேசுகையில், நடைபெற உள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எந்தவிதமான புகாருக்கும் இடமின்றி பாதுகாப்பாக நடத்தி முடிக்க கல்வித் துறை அதிகாரிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தோ்வு எழுதக்கூடிய ஆசிரியா்கள் எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் வகுப்பறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. தோ்வு பணியில் 260 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அப்துல்வஹாப், பள்ளித் துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, சு. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.