எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் தாய்மாமன் கைது

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது தாய்மாமனை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஜூலை 2026, 6:07 am IST

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது தாய்மாமனை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் கூலித் தொழிலாளியின் 15 வயது சிறுமி பிளஸ் 1 வகுப்பில் தோ்ச்சி பெறாததால், மறுதோ்வுக்காக வீட்டில் இருந்து படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டதையடுத்து, அவரது தாயாா் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.

அங்கு சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை செவிலியா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியையும், அவரது தாயாரையும் அழைத்து விசாரணை நடத்தினா். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அவரது தாய்மாமன் தங்கவேலை (40) என தெரியவந்தது. இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.