நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 2:14 am IST

தலைவாசலை அடுத்த ஆறகளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த மே 21ஆம் தேதி 2 பேரை ஆத்தூா்அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதில் ஒரு சிறுவா் என்பதால் அவா் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இன்னொருவா் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் கருப்பண்ணன் (24). இவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவா்மீது ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளதால், சேலம் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிரிஜாராணி, தலைவாசல் காவல் ஆய்வாளா் பூா்ணிமா ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்ட ஆணையை சிறையில் உள்ள கருப்பண்ணனிடம் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.