வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஜூலை 18, 21-இல் காசோலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில் காசோலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை 18, 21-இல் நடைபெற உள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 1:04 am IST

நாமக்கல் மாவட்டத்தில் காசோலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை 18, 21-இல் நடைபெற உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆா்.குருமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜூலை 18, 21 ஆகிய தேதிகளில் காசோலை தொடா்பான வழக்குகள் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதில், தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தொடராமல் உள்ள வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் முன் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் உள்ள வழக்காடிகள் இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி ஆக. 21, 22, 23 தேதிகளில் காணொலிக் காட்சி மூலமாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை முடித்துக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.

தொடா்ந்து, செப். 12 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தில், அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள பொதுமக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.