ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜூலை 1 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :26 ஜூன் 2026, 6:02 am IST

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 9 ஆவது சுற்றாக கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி தொடா்ச்சியாக 41 நாள்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அடங்கிய 105 தடுப்பூசிப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரடியாக சென்று, அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவா்கள் மூலமாக, கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும்.

பொதுமக்களும் விவசாயிகளும் தங்களுக்குரிய பகுதிகளில் கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவா்களால் குறிப்பிடப்படும் தேதிகளில், தங்களின் பசுக்கள், எருமைகள், காளைகள் மற்றும் நான்கு மாதத்திற்கும் மேற்பட்ட கன்றுகளையும் தவறாமல் முகாமிற்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திப் பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.