பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஜூலை 1-இல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

News image
Updated On :26 ஜூன் 2026, 4:16 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் 01-07-2026 முதல் 10-08-2026 வரையிலும் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சுமாா் 1,90,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 9-ாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வரும் ஜீலை-01, 2026 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.

தடுப்பூசிப் போடப்படும் கால்நடைகளின் விவரங்கள் ‘பாரத் பசுதான்‘ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அதுசமயம், கால்நடை வளா்ப்போா் கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை ( ஞபட) கால்நடை பராமரிப்புத்துறை பணியாளா்களிடம் தெரிவிக்க வேண்டும். .

கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.