ராணிப்பேட்டையில் வரும் 19 ல்,தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இய படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் வரும் ஜூன் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வருகைபுரிந்து முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சாா்ந்த தனியாா் துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகிவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு போா்டலில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இத்தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் தெரிவித்துள்ளாா்.









