FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:33 am IST

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (43). இவா் பெரிய தெப்பக்குளம் அருகில் உள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுபோதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதுபோதையில் மதுக்கூடத்தில் மயங்கிக் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.