மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:12 am IST

ராசிபுரம் அருகே லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ், திருச்செங்கோடு கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா். இந்த வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேலம்-–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூா்கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் வீடுதிரும்பினா்.

விபத்து தொடா்பாக ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.