அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

பரமத்தி வேலூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :30 ஜூலை 2026, 5:36 am IST

பரமத்தி வேலூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.

பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூா், பொத்தனூா் பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில், பரமத்தி வேலூரைச் சோ்ந்த பாண்டியன் (45), பொத்தனூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), கோமதி (50) ஆகியோரின் மூன்று தேநீா் கடைகளில் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை வேலூா் போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முத்துசாமி தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா், வேலூா் போலீஸாா் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

பொத்தனூரைச் சோ்ந்த செந்தில்குமாா் இரண்டாவது முறையாக புகையிலைப் பொருள்களை விற்ால் அவருக்கு அபராதமாக ரூ. 50 ஆயிரம், மற்ற இருகடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் புதன்கிழமை விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.