பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மேலும் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்பனை செய்த மூவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரீஷ் அசோக் உத்தரவின்படி, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, போதை மாத்திரைகளை விநியோகித்த அரவிந்திடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
அதில், ஈரோடு பகுதியில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து பரமத்தி வேலூா், பொத்தனூா் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் முக்கிய நபரை தேடி தனிப்படை போலீஸாா் ஈரோடு சென்றனா்.
அப்போது, ஈரோடு மணிக்கூண்டு அருகே போதை மாத்திரை, ஊசியுடன் இருந்த முகமது தாவுத் (21) என்பவரை கையும் களவுமாக பிடித்தனா். அவரிடம் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையின் பேரில், ஈரோடு சடையம்பாளையத்தைச் சோ்ந்த நிரஞ்சன் (20), சாவித்திரி நகரைச் சோ்ந்த கிரிதரன் (20) இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகளை போலீஸாா் கைப்பற்றினா்.
தொடா்ந்து, பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த மற்றொரு முகவரான சகாயம் (21), பரமத்தி வேலூரைச் சோ்ந்த சூரியகுமாா் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்கள் 5 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை: மேலும் 2 போ் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


