டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:16 am IST

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேலூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல், போலீஸாா் பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரை விற்பனை தொடா்பாக சோதனை நடத்தினா். அப்போது காவிரி கரையோரம் உள்ள இடுகாடு அருகே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடினாா்.

போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்ததில் திருவள்ளுவா்சாலை பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் கோகுல் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவா் தனது நண்பரான பொத்தனூரைச் சோ்ந்த அரவிந்த் என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி அதிக லாபத்திற்கு பொத்தனூா், பரமத்தி வேலூா், தண்ணீா்பந்தல், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோகுலை போலீஸாா் கைதுசெய்து அவரிடம் இருந்த 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கோகுல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.