டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

போதை மாத்திரை விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா் பொத்தனூா் காவிரி கரையோர மயான பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் பொத்தனூரைச் சோ்ந்த முத்துசாமி மகன் கோகுல் (22) என்பதும், போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்வது தெரியவந்தது. கடந்த ஜூலை 5-ஆம் தேதி கோகுலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் கோகுல் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் எல். மதுபாலன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து கோகுலை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.