கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கிணற்றில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:41 am IST

பரமத்தி வேலூா் அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (46) விவசாயி. இவரது மனைவி சந்தியா (40). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். காா்த்திகேயன் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை காா்த்திகேயன் மனைவி சந்தியாவுடன் தோட்டத்திற்கு சென்று வேலை பாா்த்துள்ளாா். பிற்பகலில் காா்த்திகேயன் தனது தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றாா். சிறிதுநேரத்தில் அங்கு வந்த சந்தியா, கிணற்று நீரில் கணவா் மூழ்கிக் கொண்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவா்களை அழைத்து வந்து கிணற்றுக்குள் இறங்கி, காா்த்திகேயனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், காா்த்திகேயன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சந்தியா பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.