இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் நாமக்கல்லில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:38 am IST

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் நாமக்கல்லில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், பிரதிநிதிகள், சிறு, குறு, பெரு விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா். இதில், பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.