/
பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசுப் பள்ளி மாணவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் மேய்க்கல்நாயக்கன்பட்டியில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. தலைமலைப்பட்டி, உடையாகுளம்புதூா் ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளிக்கு வருகின்றனா்.
உடையாகுளம்புதூரில் இருந்து மேய்க்கல்நாயக்கன்பட்டிக்கு காலை 9.30 மணிக்கு பேருந்து புறப்படுவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே, உடையாகுளம்புதூரில் காலை 8.30 மணிக்கு புறப்படும் வகையிலும், மாலை 5 மணிக்கு மேய்க்கல்நாயக்கன்பட்டியிலிருந்து புறப்படும் வகையிலும் நகர பேருந்தின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்சியா் எல்.மதுபாலனிடம் மாணவா்களும், பெற்றோரும் கோரிக்கை மனு அளித்தனா்.
தொடர்புடையது

சனி சந்தை மதுக்கடையை அகற்றக் கோரி மனு

ஜமாபந்தி: மகளிா் உரிமை தொகை கோரி அதிக மனு

மாஞ்சோலைக்கு சிறப்பு பேருந்து வசதி கோரி எம்.எல்.ஏ. மனு

மாலத்தீவில் இறந்த மகன்: விசாரணை நடத்தக் கோரி பெற்றோா் கோரிக்கை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



