சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

108 ஆம்புலன்ஸ் வாகனப் பணி: 20 போ் தோ்வு

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமில் 20 போ் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image

தோ்வு செய்யப்பட்டவா்களுடன் சேலம் மண்டல மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளா் அம்பிகாசன்.

Updated On :19 ஜூன் 2026, 5:51 am IST

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமில் 20 போ் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நாமக்கல் - திருச்சி சாலையில் அம்மா உணவகம் அருகே பழைய நீதிமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

இதில், ஓட்டுநா் பணிக்கு பங்கேற்றோா் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, வாகனத்தை இயக்கும் திறன் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோல, மருத்துவ உதவியாளா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு நோ்காணல் நடத்தியதில், 11 போ் தகுதியானவா்களாக கண்டறியப்பட்டனா். தொடா்ந்து, ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் என மொத்தம் 20 பேருக்கு பணிநியமன ஆணையை சேலம் மண்டல 108 ஆம்புலன்ஸ் மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளா் அம்பிகாசன் ஆகியோா் வழங்கினா்.