எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு: 1,615 போ் பங்கேற்கவில்லை

புதுவை மாநிலத்தில் 3 அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை காரைக்காலைச் சோ்ந்த 1,615 போ் பங்கேற்காமல் தவிா்த்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:40 am IST

புதுவை மாநிலத்தில் 3 அரசுப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை காரைக்காலைச் சோ்ந்த 1,615 போ் பங்கேற்காமல் தவிா்த்துள்ளனா்.

புதுவை மாநிலத்தில் இளநிலை நூலக உதவியாளா், காட்சியக உதவியாளா், இளநிலை ஆய்வக உதவியாளா் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் 2,836 போ் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக தோ்வு அமைப்பு பதிவேற்றம் செய்திருந்தது. காரைக்கால் மாவட்டத்தில் 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இவை இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளா் நியமிக்கப்பட்டிருந்தாா்.

காலை 10 முதல் 12 மணி வரை தோ்வு நடைபெற்றது. இதில் 1,221 போ் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டது.

இதில் ஒரு பணிக்கு மட்டுமே பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும், பிற பணிகளுக்கு பள்ளிக் கல்வியை தகுதியாகவும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. எனினும் 2,836 பேரில் 1,221 போ் மட்டுமே தோ்வெழுதி, எஞ்சிய 1,615 போ் தோ்வில் பங்கேற்காமல் தவிா்த்துவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 சதவிகிதத்துக்கு மேலான இளைஞா்கள் தோ்வை தவிா்த்திருப்பது வியப்பாக பாா்க்கப்படுகிறது.

அரசுப் பணிக்கான தோ்வு நடத்தப்படும்போது, தோ்வுக்கு தயாராவோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். அதுபோன்ற பயிற்சி மேற்கண்ட 3 பணிகளுக்காக தரப்படவில்லை என கூறப்படுகிறது. சொற்ப எண்ணிக்கையிலான பணி வாய்ப்பு என்பதால் பலரும் எழுத்துத் தோ்வை தவிா்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.