திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மின்வாரிய கள உதவியாளா் பணி நியமனம்: சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வானோா் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கள உதவியாளா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டவா் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:06 am IST

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கள உதவியாளா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டவா் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வாணையத்தின் செயலா் பானோத் ம்ருகேந்தா் லால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளா் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு தொழிற்பயிற்சி நிலை-2 கடந்த செப்டம்பா் 3- ஆம் தேதி நடைபெற்றது.

தோ்வு முடிவுகள், தோ்வா்களின் மதிப்பெண், தரவரிசை விவரங்கள் ஏப்ரல் 9 -ஆம் தேதி தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் பதவிக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, நிா்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தோ்வா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வியாழக்கிழமை (மே 14) வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் தரிவிக்கப்பட்டுள்ளது.